TamilsGuide

கனடாவில் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கனடாவில் பணவீக்கம் வீதம் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கனடாவில் பணவீக்க வீதம் 2.9 வீதமாக பதிவாகியுள்ளது.

பெற்றோலின் விலை வீழ்ச்சி பணவீக்கத்தில் ஏற்பட்ட சரிவில் முக்கிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

பணவீக்க வீதம் 3.3 வீதமாக காணப்படும் என நிபுணர்கள் எதிர்வுகூறியிருந்த நிலையில் பணவீக்க வீதம் 2.9 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வருடாந்த அடிப்படையில் பெற்றோலின் விலை 4 வீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்தது.

எவ்வாறெனினும் அடகுக் கடன் வட்டி வீதங்கள் காரணமாகவே நாட்டில் பணவீக்க நிலைமை தொடர்ந்தும் அதிகரிக்கும் போக்கினை பதிவு செய்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment