TamilsGuide

இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி அதிகரிப்பு

உளுந்து, பாசிப்பயறு , கௌபி , சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி உளுந்துக்கு இதுவரை ஒரு கிலோ கிராமிற்கு 200 ரூபாவாக காணப்பட்ட விசேட பண்ட வரி 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், கௌபி விதை குரக்கன், விதைகள் உள்ளிற்றவைக்கான இறக்குமதி விசேட பண்ட வரி ஒரு கிலோ கிராமிற்கு 70 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இது தவிர சோளத்துக்கும் 25 ரூபாய் விசேட பண்ட வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment