TamilsGuide

விரிவுரைகளை துரிதப்படுததுங்கள் - இராமநாதன் கட்புலக் கலைகள் பீட மாணவர்கள் போராட்டம்

விரிவுரைகளை துரிதப்படுததுங்கள் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக     இராமநாதன் கட்புலக் கலைகள் பீட மாணவர்கள் போராட்டம்

விரிவுரைகளை துரிதப்படுத்தக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட மாணவர்கள் 20-02-2024   செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக    இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட இசைத்துறையில் 4ஆம் வருடத்தில் கல்விகற்கவேண்டிய 3ஆம் வருட 2ஆம் அரையாண்டு மாணவர்களின் விரிவுரை செயற்பாடுகளை துரிதப்படுத்தக் கோரியே வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மாணவர்கள் வாயிற் கதவுகளை மூடி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதோடு விரிவுரையாளர்கள் பணியாளர்கள் உட்செல்லமுடியாமல் தடுத்துவைக்கப்பட்டனர்.
 

Leave a comment

Comment