TamilsGuide

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் 35 நாடுகளின் பிரதிநிதிகள் - கொழும்பில் மூன்று நாள் மாநாடு

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய பசுபிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக 35 நாடுகளின் பிரதிநிதிகள் இன்று இலங்கைக்கு வருகைத்தரவுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது ஆசிய பசுபிக் மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டின் ஏற்பாடு தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் நேற்று விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்றது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 35 நாடுகளைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்ட விவசாய அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

இதனிடையே, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகமும் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த மாநாட்டில் சீனா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விவசாய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment