TamilsGuide

செல்வராகவனை மெய்மறக்க வைத்த படம்

இயக்குனர் செல்வராகவன் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல்வேறு படங்களில் மிரட்டி வருகிறார். அடுத்து அவர் புதுப்பேட்டை 2 படத்தை எடுக்கும் முயற்சியில் இருப்பதாக சமீபத்தில் அவரே தெரிவித்து இருந்தார். இதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
  
சமீபத்தில் லவ்வர் படத்தை பார்த்த செல்வராகவன் ட்விட்டரில் அதை பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.

'லவ்வர் பார்த்தேன். Loved it. இந்த தலைமுறையின் காதலை பற்றி காட்டி இருந்தார்கள். சில நிமிடங்களுக்கு பிறகு நான் படம் பாரிக்கிறேன் என்பதை மறந்துவிட்டேன். அந்த அளவுக்கு realistic ஆக இருந்த்து' என கூறி இருக்கிறார்.

நடிகர் மணிகண்டன், ஹீரோயின் ஸ்ரீகௌரி பிரியா, இயக்குனர் பிரபுராம் வியாஸ் ஆகியோரையும் பாராட்டி இருக்கிறார் அவர். 
 

Leave a comment

Comment