TamilsGuide

கனடா பிரதமருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு 

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம், நீதிமன்றங்களில் நிலவும் பதவி வெற்றிடங்களை பூர்த்தி செய்யுமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பாமல் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் அசமந்தப்போக்கினை பின்பற்றியதாக நீதிபதி ஹென்றி பிறவுண் தெரிவித்துள்ளார்.

குறுகிய காலப் பகுதியில் நியமனம்

எனவே நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு குறுகிய காலப் பகுதியில் நியமனங்களை வழங்க வேண்டுமென அவர் உத்தரவிட்டுள்ளார்.

பதவி வெற்றிடங்களினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நீதிமன்றங்களில் சுமார் 75 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
 

Leave a comment

Comment