TamilsGuide

கதாநாயகி தேர்வில் எம்.ஜி.ஆர்-க்கு கிடைத்த தோல்வி

கடந்த 1967-ம் ஆண்டு பா.நீலகண்டன் இயக்கத்தில் வெளியான படம் காவல்காரன். சத்யா மூவிஸ் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த இந்த படத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவக்குமார், நாகேஷ், அசோகன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பில் எம்.ஜி.ஆா நடித்த ஒரு படத்திற்கு நாயகி தேர்வில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், எம்.ஜி.ஆர் இதில் தோல்வியடைந்தார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

கடந்த 1967-ம் ஆண்டு பா.நீலகண்டன் இயக்கத்தில் வெளியான படம் காவல்காரன். சத்யா மூவிஸ் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த இந்த படத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவக்குமார், நாகேஷ், அசோகன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, வாலி, ஆலங்குடி சோமு ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.

இந்த படத்திற்கு முன்னதாக ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த நான் ஆணையிட்டால் படத்தில் நாயகியாக சரோஜா தேவி நடிக்கட்டும் என்று ஆர்.எம்.வீரப்பன் சொல்ல, இல்லை ஜெயலலிதா நடிக்கட்டும் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். ஆனாலும் அந்த படத்தில், சரோஜா தேவி தான் நாயகியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சத்யா மூவிஸ் தயாரிப்பில் வெளியான 3-வது படமாக காவல்காரன் படத்தில் ஜெயலலிதா நாயகியாக நடிக்க வேண்டும் என்று ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.

இதை ஏற்றுக்கொள்ளாத எம்.ஜி.ஆர் இந்த படத்தில் சரோஜா தேவி நாயகியாக நடிக்கட்டும் என்று சொல்ல, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படத்தின் பூஜை நாளில் அழையா விருந்தாளியாக சரோஜா தேவி என்ட்ரி கொடுத்தார். இதனால் ஆர்.எம்.வீரப்பன் இந்த படத்தில் நாயகியாக சரோஜா தேவி தான் என்று எம்.ஜி.ஆர் முடிவு செய்துவிட்டதாக நினைத்தார்.

அப்போது அங்கு வந்த எம்.ஜி.ஆர் போட்டோகிராஃபரை அழைத்து எங்களை ஒரு போட்டோ எடுங்கள் என்று சொல்லி, சரோஜா தேவி, ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் மூவரும் போட்டோ எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு ஆர்.எம்.வீரப்பனுக்கு போன் செய்த ஜெயலலிதாவின் அம்மா சந்தியா, என்ன சார் இந்த படத்தில் என் மகள் குழந்தை பெற்றுக்கொள்வது போன்ற காட்சிகள் இருக்கிறதாமே! அவள் சின்ன பொண்ணு, இப்போ தான் முன்னேறி வரா... அதுக்குள்ள இப்படி நடிச்சா அவள் வாழக்கை என்னாகும் என்று கேட்டுள்ளார்.

இதை கேட்ட ஆர்.எம்.வீரப்பன், கண்டிப்பாக படத்தின் கதையை எம்.ஜி.ஆர் தான் இவரிடம் சொல்லியிருப்பார் என்று யூகித்துக்கொண்ட ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதா அம்மா சந்தியாவுக்கு படத்தின் கதை குறித்து விளக்கி கூறியுள்ளார். அதன்பிறகு அவரும் ஒப்புக்கொண்டார். பொதுவாக எம்.ஜி.ஆர் நடிக்கும் படத்தின் பூஜை முடிந்ததும் முதல் நாளில் நாயகன் நாயகி தொடர்பான காட்சிகள் எடுக்கதான் எம்.ஜி.ஆர் விரும்புவார்.

இந்த படத்தில் முதல் நாளில் எம்.ஜி.ஆர் நடிக்க சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. படத்தின் பூஜைக்கு ஜெயலலிதா வரவில்லை என்றாலும், படத்தின் நாயகி அவர் தான் ஆர்.எம்.வீரப்பன் தீவிரமாக இருந்ததால் கடைசியில் எம்.ஜி.ஆரும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பிறகு படப்பிடிப்பு முடிந்து வெளியான காவல்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
 

Leave a comment

Comment