TamilsGuide

மலேசிய இந்தியக் காங்கிரஸ் தேசியத் தலைவர் இல்ல திருமணத்தில் வைரமுத்து வாழ்த்து

மலேசியாவில் இருக்கிறேன்

மலேசிய இந்தியக் காங்கிரஸ்
தேசியத் தலைவர்
டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன்
டத்தின்ஶ்ரீ சுசிதா இணையரின்
தலைமகளுக்குத் திருமணம்;
கோலாலம்பூர் வந்திருக்கிறேன்

மணமக்கள்:
டனுஷா விக்னேஸ்வரன்
விஷால் ரூபர்ன் யோகரத்னம்

உடன்
மலேசிய இந்தியக் காங்கிரஸ்
தேசியத் துணைத்தலைவர்
டத்தோஶ்ரீ எம்.சரவணன்

பெற்றோர் பாட்டு:

"மரகதவல்லிக்கு மணக்கோலம் - என்
மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம்

கண்மணித் தாமரை
கால்கொண்டு நடந்தாள் 
கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்

மலரென்ற உறவு பறிக்கும்வரை
மகளென்ற உறவு கொடுக்கும்வரை
உறவொன்று வருவதில்
மகிழ்ந்து விட்டேன்
உறவொன்று பிரிவதில் அழுதுவிட்டேன்

எந்தன் வீட்டு கன்று இன்று
எட்டி எட்டிப் போகிறது
கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து
எட்டி எட்டிப் பார்க்கிறது
இமைகள் அதை மறைக்கிறது"

Leave a comment

Comment