TamilsGuide

20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு முழு உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைக்காக உறுமய தேசிய செயற்பாட்டு செயலகம் ஒன்று ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி உறுமய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இவ்வருட வரவு – செலவுத் திட்டத்தில் இரண்டு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதற் கட்டமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு முழு உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன் உறுமய தேசிய செயற்பாட்டு செயலகம் ஊடாக, மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மானியப் பத்திரங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், பதிவு செய்வதற்கும் உறுமய தேசிய செயற்பாட்டுச் செயலக அலுவலகத்தை 0114354600 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமோ அல்லது tinyurl.com என்ற இலத்திரனியல் படிவத்தின் ஊடாகவா தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment