TamilsGuide

பாரதிராஜா - தமிழ் சினிமாவை மடை மாற்றிய மாபெரும் கலைஞன்

’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பல கிராமப் பின்னணியில் அமைந்த கதைகளை இயக்கி, மாபெரும் வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல், தனது 80 வயதில் ”மாடர்ன் லவ்” என்ற வெப் சீரிஸில் “பறவைகள் கூட்டில் வாழும் மான்கள்” என்ற ஒரு பகுதியை இயக்கி, வயது, காலம், தலைமுறைகள் அனைத்தையும் தாண்டி காலத்தால் அழியாத அசல் கலைஞனாய், தமிழ் சினிமாவில் தன் பெயரை காலங்கள் தாண்டியும் பதிவு செய்ததோடு இல்லாமல், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இன்றளவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

'பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா' பேசுகிறேன் என தன் குரலால் ரசிகர்களுக்கு அறிமுகமானவர், “கல்லுக்குள் ஈரம்” என்ற திரைப்படத்தின் மூலம், முழு நீளப் படத்தில் நடித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்குனர் மணிரத்னத்தின் “ஆய்த எழுத்து” திரைப்படத்திலும், “பாண்டிய நாடு”, “குரங்கு பொம்மை”, ”எங்க வீட்டுப் பிள்ளை”, “திருச்சிற்றம்பலம்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அனைத்து தலைமுறைக்குமான ரசிகர்களை பெற்றார்.
வாழ்க்கை வரலாறு:
பாரதிராஜா அவர்களின் இயற்பெயர் "சின்னச்சாமி". இவர் தேனி மாவட்டத்திலுள்ள "அல்லி நகரம்" என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் பெரிய மாயத் தேவர், கருத்தம்மா. இவருக்கு பள்ளியில் படிக்கும்போதே இலக்கியங்கள் படிப்பதிலும், மேடை நாடகங்கள் நடத்துவதிலும் மிகுந்த ஆர்வமிருந்தது.
'ஊர் சிரிக்கிறது ', ’சும்மா ஒரு கதை ' போன்ற கதைகளை எழுதி அவர் ஊர் திருவிழாக்களின் போது, பல மேடைகளில் அரங்கேற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் பயணம்:
இயக்குனர் பாரதிராஜா அவர்கள் அவரது ஊரிலேயே சிறிது காலம் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்தார். அதற்கு பிறகு, சினிமாவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதால் சென்னைக்கு சென்றார். திரைத்துறைக்குள் நுழையும் அனைவரையும் போலவே, ஆரம்பத்தில் இவரும் பல இன்னல்களுக்கு ஆளானார். மேடை நாடகம், பெட்ரோல் பங்க் வேலை என பணிபுரிந்து கொண்டே சினிமாத் துறையில் நுழைய கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.
முதன் முதலில், இயக்குனர் பி புல்லையாவிடம் உதவி இயக்குனராக பாரதிராஜா பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து, பிரபலக் கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகளிடம் சேர்ந்து நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
துடிப்பான உதவி இயக்குனராக இருந்ததால் பாரதி ராஜாவுக்கு முதல் வாய்ப்பு 1977 ஆம் ஆண்டு '16 வயதினிலே ' திரைப்படம் மூலம் கிட்டியது. இதில், கமல்ஹாசன், ஶ்ரீதேவி, ரஜினி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் அதுவரை கிராமிய திரைப்படங்களுக்கு என இருந்த இலக்கணத்தை பாரதிராஜா மாற்றி எழுதினார்.
முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் அமைந்த இக்கதையில் கமல்ஹாசன் 'சப்பாணி' என்னும் பெயரில் வெள்ளந்தியாக நடித்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தது.
தமிழ் சினிமாவின் வரலாற்றை திருப்பிப் பார்த்தால், அதுவரை ஸ்டூடியோக்குள் மட்டுமே திரைப்படங்கள் படமாக்கப்பட்டன. இயக்குனர் பாரதிராஜா அவர்கள் ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முதலாக படப்பிடிப்பினை வெளிப்புறப் படப்பிடிப்புத் தளத்திற்கு கொண்டு சென்றார்.
(1980), அலைகள் ஓய்வதில்லை (1981), புதுமைப் பெண் (1983), மண்வாசனை (1983), ஒரு கைதியின் டைரி (1984), முதல் மரியாதை (1985), கடலோரக் கவிதைகள் (1986), வேதம் புதிது (1987), ஆராதனா (1987), கொடி பறக்குது (1989), புது நெல்லு புது நாத்து (1991), நாடோடி தென்றல் (1992), கிழக்குச் சீமையிலே (1993), கருத்தம்மா (1995) உள்ளிட்ட திரைப்படங்கள் பாரதிராஜாவின் மிகவும் புகழ் பெற்ற திரைப்படங்களாகும்.
பாரதிராஜாவால் அறிமுகமானோர் பட்டியல் பெரிது
இயக்குனர் பாரதிராஜா அவர்கள் அறிமுகப்படுத்திய நடிகர், நடிகைகளின் பட்டியல் மிகப் பெரிது. அவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்தார்கள் என்றே சொல்லலாம். கார்த்திக், ராதா, ராதிகா, சுதாகர், ருக்மணி, பிரியாமணி உள்ளிட்ட பலரையும் இயக்குனர் பாரதிராஜா அறிமுகப்படுத்தியுள்ளார்.
விருதுகளும், மரியாதைகளும்
பாரதி ராஜா மற்றும் இளையராஜா
பட மூலாதாரம்,KV MANI
படக்குறிப்பு,
இசையமைப்பாளர் இளையராஜாவுடன்
இந்திய அரசு இயக்குனர் பாரதிராஜாவிற்கு 2004-ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கி கவுரவப்படுத்தியது.
இயக்குனர் பாரதிராஜாவின் ”சீதாகொகா சிகே” திரைப்படத்திற்காக 1982-ஆம் ஆண்டு தேசிய விருதும், ”முதல் மரியாதை” திரைப்படத்திற்காக 1986-ஆம் ஆண்டு தேசிய விருதும், ”கருத்தம்மா” திரைப்படத்திற்காக 1995-ஆம் ஆண்டு தேசிய விருதும், ”அந்தி மந்தாரை” திரைப்படத்திற்காக 1996- ஆம் ஆண்டு தேசிய விருதும், ”கடல் பூக்கள்” திரைப்படத்திற்காக 2001-ஆம் ஆண்டு தேசிய விருதும் வழங்கப்பட்டது.
”கிழக்கே போகும் ரயில்” திரைப்படத்திற்காக 1978-ஆம் ஆண்டின் ‘ஃபிலிம்பேர்’ விருது கிடைத்தது
”16 வயதினிலே” திரைப்படத்திற்காக 1977-ஆம் ஆண்டிலும், ”புதிய வார்ப்புகள்” திரைப்படத்திற்காக 1979-ஆம் ஆண்டிலும், ”அலைகள் ஓய்வதில்லை” படத்திற்காக 1981-ஆம் ஆண்டிலும், ”ஈர நிலம்” திரைப்படத்திற்காக 2003-ஆம் ஆண்டிலும் “தமிழ்நாடு அரசின் மாநில விருதும்”, தமிழ்நாடு அரசின் “கலைமாமணி” விருதும் பெற்றார்.
‘சீதாகொகா சிலுகா’ திரைப்படத்திற்காக 1981-ஆம் ஆண்டுஆந்திரபிரதேச அரசிடம் இருந்து “நந்தி விருது” பெற்றார்.
 

 

Leave a comment

Comment