TamilsGuide

ஸ்ரோவில்  நகர பல்கலாச்சார கழகம் நடத்திய தமிழர் மரபுரிமை நாள் கொண்டாட்டம்'

கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் ஸ்ரோவில் நகரத்தில் வாழும் தமிழ் மக்கள் இணைந்து நிறுவிய 'ஸ்ரோவில்  நகர பல்கலாச்சார கழகம்' நடத்திய தமிழர் மரபுரிமை நாள் கொண்டாட்டம்' கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை அங்குள்ள உயர் கல்லூரி மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

கழகத்தின் தலைவர் சிவன் இளங்கோ மற்றும் செயலாளர் சுந்தரலிங்கம் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர் இணைந்து ஏற்பாடு செய்த இந்த அற்புதமான விழாவில் முத்தமிழின் மூன்று பிரிவுகளாக விளங்கும் 'இயல். இசை. நாடகம்' ஆகியவை நிகழ்ச்சிகள் நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

பல நடன ஆசிரியைகள். இசையாசிரியர்கள் மற்றும் பல தமிழாசிரியர்கள் ஆகியோரின் மாணவ மாணவிகள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை மேடையில் சமர்ப்பித்தனர்.

அவையனைத்தும் தமிழ் மொழியினதும் தமிழர் பண்பாட்டினது முக்கியத்துவத்தை எடுத்து விளக்கியிருந்தன.

விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் மேயர்கள் ஆகியோர் தமிழ் மக்கள் கனடிய நீரோட்டத்தில் ஆற்றிவரும் பணிகளையும் அளிக்கும் பங்களிப்பையும் விபரமாகத் தெரிவித்து பாராட்டியும்  சென்றனர்.

மண்டபம் நிறைந்த இந்த விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்ட அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு களித்து இல்லம் ஏகினர்.

படங்கள் : சத்தியன் மற்றும் ஐயா4யூ

Leave a comment

Comment