TamilsGuide

போராட்டங்களை ஒடுக்கும் நிதியினை கல்விக்காக பயன்படுத்துங்கள்

போராட்டங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படுகின்ற கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் இறப்பர் தோட்டாக்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியினை நாட்டின் கல்விக்காக ஒதுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தள்ளார்.

இன்று மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்படி ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்கம் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டது. இதற்கு அரசாங்கம் பெருமளவு பணத்தைச் செலவிட்டுள்ளது.

இந்தப் பணத்தை பாடசாலைக் கல்வியை மேம்படுத்துவதற்கு ஒதுக்க முடியுமாக இருந்தால் மிகவும் பெறுமதிமிக்கதாக அமையும் என்றும் உயர் தரம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சமூக சேவை நிறுவனம் மூலம் ஊதியம் வழங்கப்படுகின்றது.

மேலும் நாட்டிலுள்ள 10ஆயிரத்து 126 பாடசாலைகளில் 41 இலட்சம் மாணவ மாணவிகள் உள்ளனர் அவர்களின் நலன்கள் தொடர்பாக அரசாங்கம் சிந்திக்கவில்லை

அத்துடன் இந்த அரசாங்கம் 365 நாட்களும் அரச மிருகத்தனத்தை பிரயோகித்து மக்களின் வாயை மூடச் செய்யும் விடயத்திலயே கெட்டித்தனம் காட்டி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment