TamilsGuide

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான ஏலக்காய் மீட்பு

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடப்படவிருந்த சுமார் நான்கு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஏலக்காயினை தமிழக பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் மூன்று சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ஏலக்காய் மண்டபம் மரைன் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

குந்துகால் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா, ஐஸ் போதைப்பொருள், மஞ்சள், கடல் அட்டைகள் உள்ளிட்ட பல பொருட்கள் சமீப காலமாக அதிகளவில் கைப்பற்றப்படுவதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மன்னார் வளைகுடா கடல் வழியாக படகில் ஏலக்காய் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதன்போதே 43 கிலோக்கிராம் நிறையுடைய ஏலக்காய் பொதி கைப்பற்றப்பட்டுள்ளது.

குந்துகால் கடற்கரை இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்தும் முக்கிய கேந்திரமாக மாறியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment