TamilsGuide

மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

உலகுக்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் இன்று (செவ்வாய்கிழமை) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது

அதன்படி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் இன்று நடைபெற்றது.

குறித்த சிரார்த்த தினம் மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது .

இதில் மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment