TamilsGuide

சர்வதேச நாணய நிதியத்தின் மேலும் 110 நிபந்தனைகள் நிலுவையில்

இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக இரண்டாம் தவணைக்கு முன்னர் புதிதாக 75 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனால் நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவேற்ற தவறிய நிபந்தனைகளோடு சேர்ந்து இலங்கை மொத்தமாக 110 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டதின் பிரகாரம் முன்வைக்கப்பட்ட 73 நிபந்தனைகளில் 60 ஐ இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் 13 நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை.

மேலும் நவம்பர் இறுதிக்குப் பிறகு வரவிருந்த 27 நிபந்தனைகளின் காலக்கெடுவையும் சர்வதேச நாணய நிதியம் மாற்றியமைத்துள்ளது.

அதன்படி மீதமுள்ள 35 நிபந்தனைகளோடு புதிய நிபந்தனைகளோடு இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் 110 நிபந்தனைகள் நிலுவையில் உள்ளதாக வெரிடே ரிசேர்ச் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment