TamilsGuide

17 தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கை

அரச துறையின் நிறைவேற்று சேவை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று (29) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

ஊதிய முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்த தொழிற்சங்க நடவடிக்கையை அவர்கள் ஆரம்பிக்கின்றனர்.

பொதுச் சேவை பொறியியலாளர்கள் சங்கம், ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கம், கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம், கட்டிடக் கலைஞர்கள் சங்கம், உள்நாட்டு வருமான தொழிற்சங்கம், கணக்கியல் சேவைகள் சங்கம் உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் இதில் இணைந்துள்ளன.
 

Leave a comment

Comment