TamilsGuide

பிரித்தானியர்கள் போருக்கு செல்லவேண்டியிருக்கும் - எச்சரிக்கும் ராணுவ தலைவர்

போர் ஏற்படுமானால், பிரித்தானிய பொதுமக்கள் போருக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்ற கருத்தை பிரித்தானிய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். இன்று, பிரித்தானிய படைகளின் தலைவரான General Sir Patrick Saunders, பொதுமக்களுக்கு உரை ஒன்றை ஆற்ற இருப்பதாக The Daily Telegraph என்னும் பிரித்தானிய ஊடகம் தெரிவித்துள்ளது.
  
சர் பாட்ரிக், பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை கொடுக்க இருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. போர் ஏற்படுமானால், பிரித்தானிய பொதுமக்கள் போருக்குச் செல்ல வேண்டியிருக்கும், ஏனென்றால், பிரித்தானிய ராணுவம் மிகவும் சிறியதாக உள்ளது என அவர் மக்களை எச்சரிக்க இருக்கிறாராம்.

இந்நிலையில், பிரித்தானிய படைகளின் தலைவரின் கூற்றை ஆதரித்து,கருத்தொன்றை முன்வைத்துள்ளார் பிரித்தானிய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான Tobias Ellwood.

அதாவது, பிரித்தானிய படைகளின் தலைவரான சர் பாட்ரிக் கூறுவதை கவனிக்கவேண்டும் என்று கூறியுள்ள Tobias, அவர் புத்தியும் யுக்தியும் கொண்டவர்களில் ஒருவர் என்கிறார்.

அவர் சொல்வதுபோலவே, எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்னும் ஒரு சூழலில் நாம் வாழ்ந்துவருகிறோம். பனிப்போர்க் காலத்துக்குப் பின் நமது ராணுவம் முன்னிருந்த நிலையில் இல்லை. அது மிகவும் சுருங்கியிருக்கிறது. ஆகவே, நாம் நமது ராணுவத்தை போருக்கு தயார் செய்யவேண்டும் என்கிறார் Tobias. 
 

Leave a comment

Comment