TamilsGuide

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

இதன்படி நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை காலை 09.38 மணி முதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் நடைபெறவுள்ளது.

அதனை முன்னிட்டு நேற்று முன்தினம் கோபுரங்கள், தூபிகளுக்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து நேற்று காலை 07 மணி முதல்இ இன்று மாலை 05 மணி வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது பல்லாயிரக்கனக்காண அடியவர்கள் எண்ணெய் காப்பு நிகழ்வில் கலந்து கொண்டு ஆலய விக்கிரகங்களுக்கு எண்ணெய் காப்பு சாத்தி வழிப்பட்டனர்.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள கும்பாபிசேஷக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்தவண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment