TamilsGuide

கனடாவில் எழுச்சி பெறும் தமிழ் மரபுத் திங்கள்

வோன் நகரம் கனடாவின் அதிவளர்ச்சியில் முன்னணியில் வகித்துவருவதுபோல இன்று சிறப்பாக தைப்பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கனடா நாடானது குடிவரவாளரின் நாடாகும். ஏனைய பல்லின மக்கள் போலவே கனடாவின் பெரும்பான்மைப் பண்பாட்டோடு இணைந்து, எமது அடையாளத்தையும் இழக்காமல், எமது மரபுகளையும் பேணிக் காக்கக்கூடிய வசதிகள் இங்கே இருக்கின்றன. அவ்வகையில் நாமும் எமது மொழியையும், மரபுகளையும் பேணிக் காபப்பதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ் மரபுரிமைத் திங்களாகும்.

கனடிய நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடும் தை மாதம் தமிழ் மரபுரிமைத் திங்கள் ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தில், தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், வளர்க்கும் வண்ணம், பகிரும் வண்ணம் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படும். தமிழர் தமது நல்லணெண்ணத்தை, நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் இரத்தக் கொடை, தன்னார்வலர் தொண்டு போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுவர். கனேடிய தமிழ் பாரம்பரிய மாதத்திற்கு பாடல் மற்றும் கொடி உள்ளன.

தமிழ் மரபுரிமைத் திங்களின் நோக்கங்களாக பின்வருவன ஒழுங்கமைப்பளாளர்களால் முன்வைக்கப்படுகிறது:

தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் கொண்டாடுதல்.

உலகத் தமிழர்களின் பண்பாடு, கலைகள், மரபுகளைக் கொண்டாடுதல்.

தமிழர் அல்லாதவர்களோடு தமிழ் மொழி, பண்பாடு, வரலாறு பற்றிப் பகிர்ந்து கொள்ளல்.

பல்துறைகளில் தமிழர்களின் சாதனைகளை அடையாளப்படுத்தல்.

தமிழர்களின் நலத்தையும் வளர்ச்சியையும் ஊக்குவித்தல்.

தமிழர்கள் செறிந்து வாழும் நகரங்கள் ரொறன்ரோ, மார்க்கம், ஏசக்சு, பிரம்ரன், ஒசாவா, விற்பி, யோர்க் ஆகியவற்றின் மாநகர அவைகள் முதலில் தமிழ் மரபுரிமைத் திங்களை அங்கீகரித்தன.

அடுத்து, ஒன்டாரியோ மாகாணத்தில் அறிவித்து தமிழ் பாரம்பரிய மாத சட்டத்தை (Tamil Heritage Month Act) நாடாளுமன்றத்தால் இயற்றியது.

Leave a comment

Comment