TamilsGuide

இன்று ஆரம்பமாகின்றது u19 உலகக் கிண்ணம்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்கி வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குறித்த  போட்டியில் இலங்கை உட்பட 16 நாடுகள் பங்கேற்கவுள்ளன. அந்தவகையில்  இன்று தென் ஆபிரிக்காவின் சென்வெஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி பி.ப 13.30 மணியளவில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும், மேற்கிந்திய தீவிகள் அணியும் பலப் பரீட்சை நடத்தவுள்ளன.

இலங்கை அணியானது தனது  முதலாவது ஆட்டத்தில் சிம்பாப்வே அணியை வரும் 21 ஆம் திகதி எதிர்கொள்வுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment