TamilsGuide

நான் அமைதியாக இருப்பது அனைவருக்கும் நிம்மதியை தரும்- பிரேமம் இயக்குனர் பதிவு

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து 'பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான கோல்டு திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இவர் தற்போது 'கிஃப்ட்' என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நான் இனி எதையும் பதிவிடப்போவதில்லை. என் அம்மா, அப்பா, சகோதரிகளுக்கு இது பிடிக்கவில்லை. ஏனென்றால் எனது உறவினர்கள் அவர்களை பயமுறுத்துகிறார்கள். நான் அமைதியாக இருப்பது அனைவருக்கும் நிம்மதியை தரும் என நினைக்கிறேன். அதனால் அப்படியே இருக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 

Leave a comment

Comment