TamilsGuide

கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம்

கொழும்பில் கால்வாய்களை அடைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 சட்டவிரோத கட்டிடங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பல நிர்மாணங்கள் நீரின் ஓட்டத்தை தடை செய்துள்ளதாகவும், இதனால் கொழும்பு நகரில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

சில குடியிருப்புகள் நேரடியாக நீர்வழிகளைத் தடுக்கின்றன, மற்றவை கால்வாய்ப் படுகைகளில் கட்டப்பட்டுள்ளன என்று அவர் கூறுகிறார்.

பேரா குளம், மருதானை மற்றும் கிருலப்பனை பிரதேசங்களைச் சுற்றி பல சட்டவிரோத கட்டுமான வீடுகள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a comment

Comment