TamilsGuide

ஏலியனுடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன் 

பிரபல தமிழ் நடிகரான சிவகார்த்திகேயன் அயலான் ஏலியனுடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டும் வரும் நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது கொண்டாட்டங்களை புகைப்படங்கள் அல்லது வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன், தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தன்னுடைய மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா மற்றும் மகன் குகனுடன் கொண்டாடியுள்ளார்.

இதில் சிறப்பம்சமாக ஏலியனும் சேர்ந்துள்ளது, எங்களுக்கு இது அயலான் பொங்கல் என பதிவிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆறு வருடங்களுக்கு முன் தொடங்கிய அயலான் படம், CG வேலைகளால் தாமதமாகி பொங்கலுக்கு வெளியானது.

படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், ஏலியனுடன் பொங்கல் கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன்.
 

Leave a comment

Comment