TamilsGuide

எம்.ஜி.ஆருக்கு தயாரான பாடலை சிவாஜி படத்திற்கு விற்ற எம்.எஸ்.வி - ஷாக் ஆன கவிஞர்

1965-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான அன்பு கரங்கள் என்ற படத்தில் பாடல் எழுதியுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த பாடல் படத்தில் இடம்பெறவில்லை என புலமை பித்தன் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடலை இசையமைப்பாளர் எம்.எஸ்.வி சிவாஜிக்கு கொடுத்துவிட்டார் என்று பாடல் ஆசிரியர் புலமை பித்தன் ஒரு நேர்காணலில் கூறிய தகவல் வெளியாகியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த புலமை பித்தன், 1968-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் குடியிருந்த கோவில் என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமாகியுள்ளார். அதற்கு முன்பே 1965-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான அன்பு கரங்கள் என்ற படத்தில் பாடல் எழுதியுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த பாடல் படத்தில் இடம்பெறவில்லை.

இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புலமை பித்தன் நேர்காணல் ஒன்றில் பேசும்போது, நான் சிவாஜி கணேசனின் பரம ரசிகன். அவரின் ஒவ்வொரு அசைவுகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். நானே ஒரு நாடக குழுவை நடத்தி நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தவன். 1974-ம் ஆண்டு வெளியான சிவகாமியின் செல்வன் என்ற படத்தின் மூலம் சிவாஜி படத்தில் பாடல்கள் எழுத தொடங்கினேன்.

இந்த படத்தில் நான் இணைந்தது ஒரு ஆனந்த விபத்து என்று தான் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரின் நினைத்ததை முடிப்பவன் என்ற படத்திற்காக எத்தனை இனியவயளே என்று பாடி வந்தேன் என்ற பாடலை நான் எழுதியிருந்தேன். இந்த பாடல் டியூன் செய்த பின்னர் படத்தில் இடம்பெற தேர்வாகவில்லை. இந்த பாடல் சிவகாமியின் செல்வன் படத்திற்காக நான் பாடியபோது உடனே இந்த பாடலை படத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொன்னார்கள்.

இது பற்றி இசையமைப்பாளர் எம்.எஸ்.வியிடம் கேட்டபோது, அவர் பாடலை நான் விற்றுவிட்டேன் என்று சொன்னார். அதன்பிறகு இது பற்றி எம்.ஜி.ஆரிடம் சொல்லலாம் என்று ஜெமினி ஸ்டூடியோவுக்கு சென்று சொன்னேன். அண்ணே சிவாஜி படத்திற்கு பாடல் எழுதுகிறேன் என்று சொன்னதும் அவர் அதிர்ச்சியடைந்தார். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் நான் எழுதவில்லை என்று சொன்னேன். அதன்பிறகு அவர் எல்லா படத்திற்கும் எழுதுங்கள் என்று சொன்னார்.

அதன்பிறகு சிவகாமியின் செல்வன் படத்திற்கு பாடல் எழுதியதை தொடர்ந்து, சிவாஜியின் தீபம் படத்திற்கு அனைத்து பாடல்களையும் எழுதினேன். அப்போது இளையராஜா இசையில் வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த காலம். அந்த படத்தின் பாடல்கள் அனைத்தையம் நான் தான் எழுத வேண்டும் என்று கே.பாலாஜி விரும்பினார் என்று தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment