TamilsGuide

தனியார் வகுப்புகளுக்குத் தடை

வடமேல் மாகாண பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடம் இருந்து பணம் வசூலித்து தனியார் வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடைவிதித்து வடமேல் மாகாண கல்வி அமைச்சு  சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அத்துடன் குறித்த சுற்றறிக்கையை மீறும் ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதனை அதிபர்கள் முறையாக நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக ஆசிரியர்கள் சிலர் தங்களால் முன்னெடுக்கப்படும் தனியார் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்குச் செல்லாத மாணவர்களைப் பாடசாலை வகுப்பறைகளில் புறக்கணித்து பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாவதாக பெற்றோர் வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமையவே வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் ஆலோசனையின் பிரகாரம் குறித்த  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment