TamilsGuide

கனடா செல்லவிருப்போருக்கு முக்கிய தகவல்

கனடாவுக்கு வருகைதரும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு கட்டுப்பாட்டு விதிகளை விதிக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஆண்டில் கனடாவுக்கு செல்லவிருக்கும் தற்காலிக பணியாளர்கள், மாணவர் விசாவில் வருவோருக்கு கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் பெருமளவிலான வருகையை நிவர்த்தி செய்வதற்கான சீர்திருத்தங்களை வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கனடாவில் காணப்படும் வீட்டு நெருக்கடிகளுக்கும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பெருமளவிலான வருகைக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் குடிவரவு அமைச்சர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தற்காலிக பணியாளர்கள் அல்லது முதுகலைப் பட்டப்படிப்பு பணிக்கான அனுமதியைப் பெறும் வெளிநாட்டு மாணவர்கள் போன்ற பல்வேறு வழிகளில் கனடாவில் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நுழைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கனடா தற்போது 40.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர், அவர்களில் 313,000 பேர் குடியேறியவர்கள் ஆகும் என அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment