TamilsGuide

ஒரே நாளில் 122 ஏவுகணைகள் - உக்ரைன் மீது வான்வழி தாக்குதலை நடத்திய ரஷியா

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.

இதற்கிடையே, மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன

இந்நிலையில், நேற்று மிகப்பெரிய வான் தாக்குதலை ரஷியா நடத்தியிருக்கிறது. நேற்று பகலில் தொடங்கி இரவு வரை நீடித்த இந்த வான்வழித் தாக்குதலின்போது 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் ஏவப்பட்டன.

இதில் பொதுமக்கள் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கீவ் உள்பட 6 நகரங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷியா படையெடுப்பை தொடங்கியபின் நடத்தப்பட்ட மிகப்பெரிய வான் தாக்குதல் இது என்று உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஷியாவின் 87 ஏவுகணைகள், 27 டிரோன்களை உக்ரைன் படைகள் இடைமறித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment