TamilsGuide

ஜனாதிபதியின் எடுபிடிகள் மீண்டும் எழுச்சி பெற முயற்சி - எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஏயுவு வரியை அதிகரித்து நாட்டையே வங்குரோத்து நிலமைக்கு கொண்டு சென்ற ஜனாதிபதியின் எடுபிடிகள், மீண்டும் எழுச்சி பெற முயல்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பியகம பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வங்குரோத்து நிலையால் வறுமை 30 இலட்சத்திலிருந்து 70 இலட்சமாக அதிகரித்திருக்கும் நேரத்தில், வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலின் போது மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், ஆட்சிக்கு வந்த பின் அரசியல்வாதிகளே தீர்மானங்களை எடுக்கின்றனர்.

எனவே, அதனை மாற்ற வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளதாகவும், கிராமத்திலும் நகரத்திலும் தீர்மானிக்கும் அதிகாரத்தை இளைஞர்களுக்கு வழங்குவதே ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இலக்காகும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment