TamilsGuide

கஜேந்திரகுமாரை வழிமறித்து முடக்கிய சிங்களக் குடியேற்றவாசிகள்

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பை நேரில் ஆராயச் சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக, திம்புலாகல, திவுலபத்தனை கிராமங்களில் உள்ள சிங்களக் குடியேற்றவாசிகள் குழு வளமண்டி பாலத்தை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
  
இன்று காலை கஜேந்திரகுமாரை பயணிக்க அனுமதிக்காததால், சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் வளமண்டி பாலத்திற்கு அருகில் வாகனத்துக்கு உள்​ளேயே இருக்க நேரிட்டது. சிங்களக் குடியேற்றவாசிகளின் கூச்சல்களுக்கு மத்தியில் அவர் திரும்பிச் சென்றார்.

அம்பிட்டிய சுமனரதன தேரர் மற்றும் பொல்கஹ அரவ பிரதேசத்தைச் சேர்ந்த தேரர் உட்பட பெருந்தொகையான சிங்கள மக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த உடனேயே ஸ்தலத்துக்கு விரைந்த கரடியனாறு​ பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த அரசியல்வாதி இனவாதத்தை தூண்டி தமது பயிர்ச்செய்கை நிலத்தை தடை செய்ய வந்துள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்.
 

Leave a comment

Comment