TamilsGuide

கைகளை பயன்படுத்தாமல் திய கின்னஸ் சாதனை படைத்த கனேடிய இளைஞன்

கனடாவை சேர்ந்த ராபர்ட் முரே என்பவர் சிறுவயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் பெரும் ஆர்வம் கொண்டவர்.

குறித்த நபர் இரு கைகளையும் பயன்படுத்தாமல் சைக்கிள் ஓட்டும் கலையை பல ஆண்டுகளாக முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்று வந்துள்ளார்.

இதன் காரணமாக தனது இரண்டு கைகளையும் பயன்படுத்தாமல் 130 கி.மீ தூரம் வரை சைக்கிள் ஓட்டி புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

இந்த வியப்புமிகு சாதனையை 5 மணி நேரம் 37 நிமிடங்களில் நிறைவு செய்துள்ளார்.

ராபர்ட் முரே தன்னுடைய 15 வயதில் வாங்கிய முதல் சைக்கிளில் தான் இந்த கின்னஸ் சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார்.

இந்த சாதனையை நிகழ்த்துவதற்காக பல மாதங்கள் இடைவிடாத பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார்.

இந்த சிறப்பான சாதனை பயணத்தின் போது சுமார் 122 கி.மீ தூரம் வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக சென்று கொண்டிருந்தபோது அவருக்கு களைப்பு அதிகமானது. இருந்தும் மனம் தளராமல் சைக்கிளை ஒட்டி அவர் சாதித்து காட்டியுள்ளார்.

மேலும் சிறப்பான விடயம் என்னவென்றால் இதை வெறும் தனிப்பட்ட சாதனைக்காக மட்டும் செய்யாமல் அல்சைமர் நோய்க்கு நிதி திரட்டும் முயற்சிக்காக ராபர்ட் செய்துள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
 

Leave a comment

Comment