TamilsGuide

வட் வரி சட்டமூலம் மீதான விவாதத்தை நடத்துவதற்கான பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர், இன்று மாலை வட் வரி திருத்த சட்டமூலத்தை விவாதிப்பதற்கான பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமானதும், சட்டமூலம் மீதான விவாதத்தை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முன்வைத்த எதிர்ப்பு காரணமாக சபாநாயகர் வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார்.

இதனை அடுத்து வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில் ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் ஒருவர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

புதிய திருத்தங்களின்படி, டீசல், பெட்ரோல், எரிவாயு மற்றும் சோலருக்கும் வட் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் விவசாய உழவு இயந்திரங்கள் மற்றும் இரசாயன உரங்களுக்கும் வட் வரி விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment