TamilsGuide

இலவச அனுமதியுடன் இலங்கையில் நடக்கும் பிரமாண்ட இசை திருவிழா.. 

இந்திய திரையுலகில் திறமையான பாடகர்களில் ஒருவர் ஹரிஹரன். இவர் பாடகர் மட்டுமின்றி இசையமைப்பாளரும் ஆவார்.

மேலும் இவருடைய குரலில் வெளிவந்த அன்பே அன்பே கொள்ளாதே, அவள் வருவாளா, என்னை தாலாட்ட வருவாளா, மின்னல் ஒரு கோடி என பல சூப்பர்ஹிட் பாடல்களை நாம் கேட்டு மகிழ்ந்து இருக்கிறோம்.

வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி யாழ்ப்பாணம் முத்தவெளி அரங்கில் முற்றிலும் இலவசமாக இந்த இசை திருவிழா நடக்கிறது.

ஆம், நிகழ்ச்சியை காண வரும் ரசிகர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம். இதற்கான டிக்கெட்ஸ், இனி வரும் நாட்களில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குழு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்

SLIIT Northern UNI நடத்தும் இந்த நிகழ்ச்சி வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும், MagicK group Sponsor செய்ய யாழ் வருகையை பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு, இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சியை ஹரிஹரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு நடிகை ரம்பா சிறப்பு விருந்தினராக வர உள்ளாராம், இந்த நிகழ்ச்சியை ரம்பாவின் கணவர் தான் நடத்தவுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

நடிகை ரம்பா மட்டுமின்றி தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் இந்த இசை திருவிழாவிற்கு வருகை தரவுள்ளனர். அவர்கள் யார்யாரென்று வரிசையாக பாருங்க..

நடிகை ரம்பா 

நடிகர் யோகி பாபு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

பின்னணி பாடகி ஸ்வேதா மோகன்

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி

நடிகர் சிவா

பாடகி ஸ்ரீநிஷா

சாண்டி மாஸ்டர்

கலா மாஸ்டர்

சஞ்சீவ் - ஆல்யா மானசா

மைனா நந்தினி

KPY பாலா

புகழ்

ரச்சிதா

நடிகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி  

ஸ்டீபன் தேவஸ்ஸி


 

Leave a comment

Comment