TamilsGuide

அரசியல்வாதிகள் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம் – அனுர

பேருந்து, ரயில் என அரசியல்வாதிகள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் புதிய அரசியல் கலாசாரத்தை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும் என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தனிப்பட்ட பாதுகாப்புக்காக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எவரும் பொலிசாரை பயன்படுத்தியதில்லை என கூறியுள்ளார்.

வேறு நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள் பேருந்து, ரயில், சைக்கிள் என மக்களுடன் இணைந்தே செல்வதாகவும் அந்த கலாசாரம் இங்கு வர வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வங்குரோத்து அடைந்த நாட்டை பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்யும் துணிவு தேசிய மக்கள் சக்திக்கு உள்ளது என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டிலும் ஏனைய நாடுகளில் வாழும் இலங்கையர்களின் அறிவைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை மீட்டெடுப்போம் என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment