யாழ். இந்துக் கல்லூரியின் வரலாற்று சாதனை!
வெளியாகியுள்ள சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் 01 Dec 2023. வெளியான நிலையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனைப் படைத்த மாணவர்கள் மற்றும் பாடசாலைகள் தொடர்பான விபரங்கள் வெளியாகி வருகின்றன.
இந்தநிலையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளனர். பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் 74பேர் 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும் தமது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இதேவேளை வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் கண்டியைச் சேர்ந்த மாணவி ஒருவர் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் மாணவி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.