TamilsGuide

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான தீர்மானம்

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

நேற்று (30) நள்ளிரவு முதல் சிலோன் ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 27 ரூபாவினால் குறைக்க இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இருப்பினும் , பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.;
 

Leave a comment

Comment