TamilsGuide

யாழில் MICE Expo ஆரம்பம்

சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் அனுசரணையின் கீழ் இலங்கை சமவாயப் பணியகத்தினால் கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது MICE Expo நிகழ்வானது எதிர்வரும் 03 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இது குறித்து வடமாகாண சுற்றுலா பணியக தலைவர் அ.பத்திநாதன் கருத்துத் தெரிவிக்கையில் ”வடமாகாணத்திலே சுற்றுலா என்பது ஒரு காலத்திற்கு முன்னெடுக்கப்படும் .குறித்த பருவ காலத்தினை தவிர சுற்றுலாத்துறை சாராந்தோர் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

அதன் அடிப்படையில் 45 பேர் இந்நியாவில் இருந்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சபையின் மைஸ் எக்ஸ்போ 2023 இற்கு வருகை தரவுள்ளனர். இதற்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment