TamilsGuide

சிரேஷ்ட அடிப்படையில் புதிய பொலிஸ்மா அதிபர் - ஜனாதிபதி

புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படும் வரையில் 09 மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் வழமை போன்று மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறவிருந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்கு நான்கு தடவைகள் சேவை நீடிப்பு வழங்கினார்.

எவ்வாறாயினும் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அனைத்து சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதற்கமைவாக புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைவாக புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படும் வரையில் 09 மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் வழமை போன்று மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று இது தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, புதிய பொலிஸ் மா அதிபராக தெரிவு செய்யப்படுவதற்கு தகுதி பெற்றவர்களின் பட்டியலை சிரேஷ்டத்துவத்தை கருத்திற்கொண்டு ஜனாதிபதி அடுத்தவாரம் அரசியலமைப்பு சபைக்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a comment

Comment