TamilsGuide

மகிழ்ச்சியில் அம்பாறை மீனவர்கள்

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் அதிகளவான கீரி மீன்கள் பிடிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறு பிடிக்கப்படும் கீரி மீன்கள் கிலோவொன்றுக்கு 300முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், இதன்காரணமாக ஒரு மீனவரின் நாள் வருமானம் 05 முதல் 10 இலட்சமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளளது.

அத்துடன் கிளவால், வளையா, சூரை போன்ற மீன்களும் அதிகளவில் பிடிக்கப்படுவதாகவும், இதன் படி வளையா மீன் 1 கிலோகிராம் 1800 ரூபாய்க்கும், கிளவால் 1 கிலோகிராம் 2000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment