TamilsGuide

ஹமாஸ் பிடியில் 50 நாட்கள் சிக்கியிருந்த 9 வயது அயர்லாந்து சிறுமி

பிணைக்கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் படைகளின் பிடியிலிருந்து 50 நாட்களுக்கு பின்னர் 9 வயது அயர்லாந்து சிறுமி விடுவிக்கப்பட்டுள்ளார். அயர்லாந்து - இஸ்ரேலிய குடிமகளான Emily Hand அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் பிடியில் சிக்கினார். இஸ்ரேல் எல்லையில் இருந்து காஸாவுக்கு பணயக்கைதியாக கொண்டு செல்லப்பட்ட 240 பேர்களில் சிறுமி Emily Hand-ம் ஒருவர்.
  
இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காஸா பகுதியில் இன்னும் சிறை வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் குறைந்தது 30 குழந்தைகளில் இவரும் ஒருவர்.

இஸ்ரேல் - ஹமாஸ் படைகள் இடையிலான போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக தனது மகள் விடுவிக்கப்பட மாட்டார் என்ற அச்சத்தைப் பற்றி அவரது தந்தை முன்பு பேசியிருந்தார்.

எமிலியின் நீலக் கண்கள் என் கண்களைப் பார்ப்பதை நான் பார்க்கும் வரை, நான் எதையும் நம்பப் போவதில்லை என 63 வயதான தாமஸ் ஹண்ட் கண்கலங்கியிருந்தார்.

தற்போது போர் நிறுத்தம் தொடங்கிய இரண்டாவது நாளில் சிறுமி Emily Hand விடுவிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 
 

Leave a comment

Comment