TamilsGuide

இஸ்ரேலுடனான போரில் புதிய திருப்பம்- ஹமாஸ் தலைவர் சூசகம் 

நாங்கள் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகாமையில் இருக்கிறோம் என்று ஹமாஸ் தலைவர் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால், ஹமாஸ் சிறைவைத்துள்ள சுமார் 240 பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதுடன், பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட இஸ்ரேல் சிறையில் வாடும் பாலஸ்தீன மக்கள் 300 பேர் விடுவிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
  
அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் தொடுத்த தாக்குதலை அடுத்து, போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், தொடர் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இதில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 14,128 என்றும் இதில் சிறார்கள் எண்ணிக்கை 4,000 கடந்துள்ளது என்றும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கத்தார் தலைமையில் தீவிர பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டது. இதனிடையே, தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஈடாக பணயக்கைதிகள் சிலரை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் சிறிய நடைமுறை சிக்கல்களைக் கொண்டுள்ளது என்று கத்தார் பிரதமர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

வெளியான தகவல்கள் அடிப்படையில், ஐந்து நாட்கள் நீடிக்கும் போர் நிறுத்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்படும் எனவும், பதிலுக்கு 50 முதல் 100 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தவிர்த்து, இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் வேறு நாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment