TamilsGuide

கமலுக்கு  ஸ்பான்சர் செய்த ஜெயலலிதா ...

இயக்குனர் முக்தா சீனிவாசன் கூறிய தகவல் ... அப்போது நான் சூரியகாந்தி என்கிற திரைப்படத்தை தயாரித்து இயக்கிக் கொண்டிருந்தேன். இப்படத்தில் ஜெயலலிதா-முத்துராமன் நடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஆடிப்பாடி நடிக்கும் டூயட் காட்சி ஒன்றை படமாக்கினேன். சில நாட்களுக்குள் அந்தக் காட்சியை எடிட் செய்தேன். அதை ஜெயலலிதாவுக்கு போட்டுக் காட்டினேன். முதலில் காட்சியைக் கண்டு களிப்புற்ற அவர், இரண்டு நாட்களுக்குப் பிறகு என்னைபோனில் அழைத்தார்.

“அந்தக் காட்சியை மறுபடியும் ரீடேக் செய்து விடுங்கள்’ என்று வேண்டினார். ஏன் என்று நான் கேட்க, “என் உடை எனக்குப் பிடிக்கவில்லை; வேறு உடையில் அதில் நான் நடிக்க விரும்புகிறேன்” என்றார். எனக்கு அதனால் கூடுதல் செலவு 8000 ரூபாய் ஆகும். இருந்தும் நான் சரி என்று சொல்லி விட்டேன். முத்துராமன் (நடிகர்) அவர்களிடம் விஷயத்தைக் கூறி தேதி வாங்கி வைத்து விட்டேன். அந்தக் காட்சியின் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன். அவர் ஊரில் இல்லை. ஜெயலலிதாவிடம் அதை கூறினேன். அவர் – “பரவாயில்லை; தங்கப்பன் மாஸ்டரோடு ஒரு இளைஞர் உதவியாளராக பணியாற்றினாரே; அவரை வைத்துக் கொண்டு படமாக்கலாம்” என்று கூறினார். அந்த உதவி டான்ஸ் மாஸ்டர் வேறு யாருமில்லை; நம் கமல்ஹாசன் தான். அப்போது அவர் தங்கப்பன் மாஸ்டரிடம் டான்ஸ் அசிஸ்டெண்டாக பணியாற்றிக் கொண்டிருந்தார். (கமலுக்கு அப்போது 18-19 வயது இருக்கலாம்.ஜெயலலிதாவுக்கு 25-26 வயது.) அவரை அழைத்து வந்து, அவர் ஆடிக்காட்ட, ஜெயலலிதா -முத்துராமனை நடிக்கவைத்து அந்தக் காட்சியை மீண்டும் படமாக்கினேன்.

Paravasam Nayagan

Leave a comment

Comment