TamilsGuide

22 கோடி ரூபாய் அபராதம் - நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிரடி

இவ்வருடம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கள் மூலம் சுமார் 22 கோடி ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், பொருட்களை மறைத்து வைத்தல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக இந்த அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதத்திற்கும் இடையில் இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும், இதுவரை 19,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்றைய தினம் மாத்திரம் (15) பொலன்னறுவை மற்றும் நுவரெலியா பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பல சுற்றிவளைப்புக்களின் மூலம் 04 இலட்சம் ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

Leave a comment

Comment