TamilsGuide

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் மதில் சுவர் அமைக்கப்பட வேண்டும் - விவேக் ராமசாமி

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் மதில் சுவர் அமைக்கப்பட வேண்டும் என அமெரிக்க குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான விவேக் ராமசாமி கூறியுள்ளார்.

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக சில வேட்பாளர்கள் கட்சிக்குள் போட்டியிட்டு வருகின்றனர்.

அவ்வாறான வேட்பாளர்களில் ஒருவராக விவேக் ராமசாமி காணப்படுகின்றார்.

கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் மதில் சுவர் எழுப்பப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிராத போதை மருந்து கடத்தல்கள் போன்றவற்றை தடுக்கும் நோக்கில் இவ்வாறு மதில் சுவர் உருவாக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தமது கட்சியின் எல்லை பாதுகாப்பு கொள்கை போதுமானதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

மியாமியில் நடைபெற்ற வேட்பாளர் தெரிவு விவாதமொன்றில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment