TamilsGuide

மலையாள பிரபலத்தை நேரில் சந்தித்த ஜிகர்தண்டா- 2 படக்குழு

'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இதில், தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ போன்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்தது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' படக்குழு பிரபல மலையாள நடிகரான மம்முட்டியை நேரில் சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

Leave a comment

Comment