TamilsGuide

தங்கலான் படத்தில் என்னுடைய ரோல் இதுதான்.. விக்ரம் 

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26 - ம் தேதி வெளியாக இருக்கிறது.

அதிக பொருட்செலவில் வரலாற்றுப் பின்னணியுடன் உருவாகியுள்ள இப்படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் தங்கலான் படத்தின் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த படத்தை ஹாலிவுட் தரத்தில் எடுத்து உள்ளனர் என சினிமா ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தங்கலான் படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் பேசிய விக்ரம், தங்கலான் படத்தில் எனக்கு ஒரு வசனம் கூட இல்லை. பிதாமகன் படம் போன்று இந்த படம் அமைந்து இருக்கும் என்று விக்ரம் கூறியுள்ளார்.  

Leave a comment

Comment