TamilsGuide

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

தரமற்ற மருந்துகளை நாட்டுக்கு இறக்குமதி செய்தமை உள்ளிட்ட பல காரணங்களை அடிப்படையாக கொண்டு சுகாதார துறையின் உயர்கட்ட அதிகாரிகள் சிலர் மீது கடந்த நாட்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதற்கமைவாக அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்திருந்தது.
குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைவரும் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவினால் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சில் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் பணிப்பாளர் சபையுடன் அமைச்சர் நடத்திய விசேட கலந்துரையாடலில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம 1992ஆம் ஆண்டு அரசாங்க சேவையில் இணைந்து 2000ஆம் ஆண்டு விசேட வைத்திய நிபுணரானார்.

தற்போது தேசிய தொற்று நோய் நிறுவகத்தில் சிரேஷ்ட வைத்திய நிபுணராக கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment