TamilsGuide

சிகப்பு ரோஜாக்கள் அக்டோபர் 27,  1978

கமல்ஹாசன் படம் முழுக்க செம ஸ்டைலிஷாக வந்து அதிகமான பெண் ரசிகர்களை ஈர்த்த படம்.
16 வயதினிலே,
கிழக்கே போகும் ரயில் என்று கிராமத்து  இயக்குனர் என பாரதிராஜா பேர் வாங்கியிருந்த நேரம் தடாலடியாக சிட்டி, சைக்கோ த்ரில்லர் என வியக்க வைத்தார்.
ஶ்ரீதேவி முதல் பாதியில் காதல் இளவரசியாக பின் பாதியில் பயந்து, மிரண்டு, நம்மையும் நடிப்பில் மிரள வைத்தார்.
இன்றுவரை இசை ரசிகர்களின் பிளே லிஸ்டில் இருக்கும்
நினைவோ ஒரு பறவை...
இந்த மின்மினிக்கு பாடல்களையும், நடுங்க வைக்கும் பின்னணி இசை வழங்கிய ராஜாவை எத்தனை பாராட்டினாலும் போதாது.
கமல் பங்களாவை ஒரு வித பய கோணத்தில் ஒளிப்பதிவு செய்திருந்தார் ஒளிப்பதிவாளர் நிவாஸ்.
மொத்தத்தில் ரசிகர்களை இன்றுவரை கட்டிபோ ட்டு வெள்ளிவிழா கொண்டாடிய படம்.
முதலில் சிவகுமார், மற்றும் வேறு ஒரு முக்கிய நடிகரை அணுகி அவர்கள் மறுக்க  புதுமை விரும்பியான கமல் உடனே ஒப்புக்கொள்ள நமக்கு சிகப்பு ரோஜாக்கள் கிடைத்தது.
20 நாட்களில் படப்பிடிப்பை முடித்து உள்ளார்கள்

சிறு வயதில் பெண்களால் பாதிக்கப்பட்டு , பின்னர் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை  கொன்று பெண் இனத்தை பழி வாங்கும்  எதிர்மறை கதாநாயகன் பாத்திரம் கமலுக்கு. வெளுத்து வாங்கி இருப்பார் கமல்.
குறுகுறுவென காதல் பார்வை வீசுவதும், நளினமாக காதல் செய்வதும், குரூரமாக குத்தி கொல்வதும் மனிதர் மிரட்டியிருப்பார்.
Anti hero வாக நடிக்க ஒரு தில் வேண்டும்.
அது கமலுக்கு அப்போதே இருந்ததால் மிகப்பெரிய வெற்றியை சூடிகொண்டார்.
இந்த படம் சென்னை தேவி தியேட்டரில் வெளியானபோது டிக்கட் வாங்க அண்ணா சிலை வரை கியு நின்றதாக பாரதிராஜா இன்றுவரை பெருமை படுகிறார்.
சிகப்பு ரோஜாக்கள் படத்துக்காக தமிழ் திரையும் பெருமை படுகிறது.

Paravasam Nayagan
 

Leave a comment

Comment