TamilsGuide

நெல் களஞ்சியசாலையில் நெல் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்

குருநாகல் மாவட்டத்தில் இரண்டு அரச நெல் களஞ்சியசாலைகளில் இருந்து ஏழு இலட்சம் கிலோ நெல் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இடை நிறுத்தப்பட்ட பணியாளர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முறையான விசாரணை நடத்தப்படும் என கோதுமை சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் சட்டத்தரணி புத்திக இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.

நிக்கவரட்டிய, பொல்கஹவெல மஹாஓயா உட்பட குருநாகல் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான ஐந்து களஞ்சியசாலைகளில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் இருப்புக்கள் காணாமல் போயிருந்தன.

இது தொடர்பில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் உள்ளக ஊழியர்கள் குழுவொன்று விவசாய அமைச்சரிடம் முறைப்பாடு செய்திருந்த நிலையில், இது தொடர்பான அறிக்கையை 3 நாட்களுக்குள் வழங்குமாறு நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவருக்கு பணிப்புரை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
 

Leave a comment

Comment