TamilsGuide

உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கை நாட்டிற்கு வருகைத் தரவுள்ளது.

இந்த குழுவில் உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் வருகைத் தரவுள்ளனர்.

உலக வங்கிக் குழு ஜனாதிபதி மற்றும் பலதரப்பு நிதி நிறுவனங்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதுடன் இலங்கையில் உலக வங்கியின் உதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் அவதானிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த குழு இன்று அனுராதபுரத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment