TamilsGuide

இலங்கையில் மக்களை ஏமாற்றிய 990 கோடி ரூபாய் மோசடி - அம்பலத்திற்கு வந்த ரகசியம் 

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி 990 கோடி ரூபாவை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மீது நிதி குற்ற முறைக்கேடு, நம்பிக்கை துரோகம் மற்றும் பணம் தூய்மையாக்கல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் நிதி நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பங்குதாரராகவும் பணியாற்றியுள்ளார்.

சந்தேக நபர் கண்டி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Comment